தென்மேற்கு கம்போடியாவில் இராணுவ தளத்தில் அதிகரிக்கப்பட்டுள்ள பாதுகாப்பு!
தென்மேற்கு கம்போடியாவில் உள்ள ஒரு இராணுவ தளத்தில் பாரிய வெடிப்பு சம்பவம் இடம்பெற்றதை தொடர்ந்து குறித்த பகுதியில் பாதுகாப்பு நடவடிக்கை பலப்படுத்தப்பட்டுள்ளது.
குறித்த வெடிப்பு சம்பவத்தில் ஏறக்குறைய 20 வீரர்கள் உயிரிழந்துள்ளதுடன், பலர் காயமடைந்தனர்.
கொம்பொங் ஸ்பியூ மாகாணத்தில் உள்ள தளத்தில் இந்த வெடிப்பு சம்பவத்தால் அருகிலுள்ள வீடுகள் சேதமடைந்தன.
இதனை அடுத்து இராணுவம் உடனடியாக தளத்திற்கான பாதையை மூடியது என்றும், கிராம மக்கள் பீதியில் உள்ளனர், பாதுகாப்பான இடத்தைத் தேடினர் என்றும் நபர் ஒருவர் கூறியுள்ளார்.
(Visited 10 times, 1 visits today)





