அமெரிக்காவில் உடல் உறுப்புகளை எடுக்க முயன்ற போது விழித்துக் கொண்ட நபர்
அமெரிக்காவில் மாரடைப்பால் பாதிக்கப்பட்ட நபர் ஒருவரின் மூளை செயலிழந்துவிட்டது என்று மருத்துவர்கள் அறிவித்தனர்.
குறித்த நபரின் உடல் உறுப்புகளைப் பெறுவதற்கான அறுவைச் சிகிச்சைக்கு ஆயத்தங்கள் நடந்துகொண்டிருந்தபோது அவர் திடீரெனக் கண்விழித்தார்.
Anthony Thomas Hoover என்பவரின் மூளை இயக்கம் முற்றிலும் நின்றுபோனதால் அவர் மூச்சுவிடுவதற்கு உதவிய இயந்திரத்தை நீக்குவதற்குக் குடும்பத்தார் முடிவெடுத்தனர்.
ஹூவர் தமது உடல் உறுப்புகளைத் தானம் செய்வதற்குப் பதிவு செய்திருந்ததால் அறுவைச் சிகிச்சைக்குக்
கொண்டுசெல்லப்பட்டார்.
பின்னர் மருத்துவர் ஹூவர் இன்னும் தயாராக இல்லை என்று அவரின் சகோதரி ரோரரிடம் (Rhorer) குறிப்பிட்டுள்ளார். ஹூவரை வீட்டுக்கு அழைத்துச் செல்லும்படியும் அவர் நீண்ட நாளுக்கு உயிர்பிழைக்க மாட்டார் என்றும் மருத்துவர் அப்போது கூறினார்.
கடந்த மூன்று ஆண்டுகளாக ரோரர் ஹூவரைப் பார்த்துக்கொள்கிறார். இந்த ஆண்டு தொடக்கத்தில்தான் ஹூவர் அறுவைச் சிகிச்சை அறையில் அழுது ஆர்ப்பாட்டம் செய்தது ரோரருக்குத் தெரிய வந்தது. அரசாங்க அதிகாரிகள் சம்பவத்தை விசாரித்து வருகின்றனர்.