உலகம்

உலகின் மிகப் பெரிய கப்பலின் முதல் பயணம் 10 ஆயிரம் பயணிகளுடன் ஆரம்பம்

உலகின் மிகப் பெரியதாக கருதப்படும் கப்பல், தனது முதல் சேவை நேற்று அமெரிக்காவில் உள்ள மியாமி துறைமுகத்தில் இருந்து தொடங்கி உள்ளது.

உலகின் மிக நீளமான பிரம்மாண்ட பயணிகள் பொழுது போக்கு கப்பலை ராயல் கரீபியன் நிறுவனம் உருவாக்கி உள்ளது. இந்த கப்பல் 365 மீட்டர் நீளம் கொண்டது. இந்த கப்பலில் அனைத்து பொழுது போக்கு அம்சங்களும் இருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்த கப்பல் 365 மீட்டர் நீளம் கொண்டது என தெரிவிக்கப்பட்டுள்ளது.20 அடுக்குகளை கொண்டதாக இந்த கப்பல் கட்டப்பட்டுள்ளது.

ஒவ்வொரு அடுக்கிலும் ஒவ்வொரு பிரிவு சுற்றுலா செல்வோர் தங்க, நவீன வசதிகளுடன் அறைகள் கட்டப்பட்டுள்ளன.

6 நீர் வீழ்ச்சி, 7 நீச்சல் குளங்கள், ஒரு பனிக்கட்டி சறுக்கு மைதானம் இந்த கப்பலுக்குள் இருக்கிறது. 3 திரையரங்குகள், 40 உணவகங்கள் மற்றும் மதுபானசாலைகள் இருக்கின்றன.

இந்த பிரமாண்டமான கப்பலில் 7,600 பயணிகள் பயணம் செய்ய முடியும். அவர்களுக்கு உதவி செய்ய 2,350 பணியாளர்கள் கப்பலில் இடம் பெற்றுள்ளனர்.

மொத்தத்தில் 10 ஆயிரம் பேருடன் இந்த பிரம்மாண்ட கப்பல் கடலில் உலா வரும்.

(Visited 10 times, 1 visits today)

TJenitha

About Author

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *

You may also like

உலகம் விளையாட்டு

சாம்பியன்ஸ் லீக் அரையிறுதிக்கு முன்னேறிய ரியல் மாட்ரிட் மற்றும் ஏசி மிலன்

  • April 19, 2023
ரியல் மாட்ரிட் சாம்பியன்ஸ் லீக் அரையிறுதியில் செல்சிக்கு எதிராக 2-0 என்ற கணக்கில் வெற்றி பெற்றது, அது 4-0 என்ற மொத்த வெற்றியைப் பெற்றது, போராடிக்கொண்டிருந்த லண்டன்
உலகம் கருத்து & பகுப்பாய்வு

விராட் கோலி முதல் விஜய் வரை அனைவரது டுவிட்டர் கணக்குகளிலும் ப்ளூ டிக் நீக்கம்

  • April 21, 2023
டுவிட்டர் சந்தா செலுத்தாதவர்களின் கணக்குகளில் ப்ளூ டிக் நீக்கப்பட்டுள்ளதாக தெரியவந்துள்ளது உலகின் மிகபெரிய பணக்காரரும், வாகன உற்பத்தி நிறுவனமான டெஸ்லாவின் தலைமை செயல் அதிகாரியான எலான் மஸ்க்