ரஷ்ய தேர்தலில் வாக்காளர்களை ஊக்குவித்த மந்திரவாதி!

ரஷ்ய ஜனாதிபதி தேர்தலில் வாக்காளர்களை ஊக்குவிக்கும் வகையில், மந்திரவாதி ஒருவர் நடவடிக்கை மேற்கொண்டுள்ளார்.
வாக்குச்சாவடி முன்பு முகாமிட்ட மந்திரவாதி ஒருவர், நூதன வழிபாடு நடத்தியுள்ளார்.
சைபீரியன் பிராந்தியத்தில் வசிக்கும் ஷமான் என அழைக்கப்படும் மாந்தரீக சமூகத்தை சேர்ந்த அவர், நெருப்புமூட்டி ஆராதனை காட்டி வாக்காளர்களின் தலையை தொட்டு ஆசிர்வதித்தார்.
அதனைத் தொடர்ந்து குறிப்பிட்ட வாக்குச்சாவடி அமைந்துள்ள பகுதியை சேர்ந்த பாரம்பரிய இசைக் குழுவினர், மேளம் வாசித்தும், நடனமாடியும் வாக்காளர்களை கவர்ந்தனர்
(Visited 22 times, 1 visits today)