கடைசி டெஸ்ட் மிகவும் முக்கியம்… இந்திய அணியில் ஏற்பட உள்ள மாற்றங்கள்
இந்திய அணி சுமார் 12 ஆண்டுகளுக்கு பின்னர் சொந்த மண்ணில் ஒரு டெஸ்ட் தொடரை இழந்துள்ளது.
நியூசிலாந்து அணிக்கு எதிராக நடைபெற்ற முதலிரண்டு போட்டிகளிலும் தோல்வியடைந்து தொடரை இழந்த இந்திய அணி கடும் பின்னடைவை சந்தித்துள்ளது.
4331 நாள்களுக்கு பின் சொந்த மண்ணில் டெஸ்ட் தொடரை இழந்தது ஒருபுறம் இருக்க, வரும் ஐசிசி டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதிப்போட்டிக்கு தகுதிபெறும் வாய்ப்பு குறைவாக உள்ளது.
இந்திய அணிக்கு இந்த சுழற்சியில் இன்னும் 6 டெஸ்ட் போட்டிகள் இருக்கின்றன. நியூசிலாந்து அணிக்கு எதிராக கடைசி டெஸ்ட் போட்டியும், ஆஸ்திரேலியாவுக்கு எதிராக 5 டெஸ்ட் போட்டி கொண்ட பார்டர் – கவாஸ்கர் தொடரும் உள்ளன. இந்த 6 போட்டியில் நான்கு போட்டிகளை வென்றாக வேண்டிய கட்டாயத்தில் இந்தியா உள்ளது. இந்தியாவின் இத்தகைய தோல்வியால் ஆஸ்திரேலியா, நியூசிலாந்து, தென்னாப்பிரிக்கா ஆகிய அணிகளுக்கும் தற்போது இறுதிப்போட்டிக்கு செல்லும் வாய்ப்பு அதிகமாகி உள்ளது.
அந்த வகையில் வரும் நவ.1ஆம் தேதி தொடங்க உள்ள மூன்றாவது டெஸ்ட் போட்டியை வென்று ஆறுதல் வெற்றியை தேட இந்திய அணி முயற்சிக்கும். அது இந்திய அணி மீதான அழுத்தத்தை சற்றே குறைக்கலாம். ரோஹித் சர்மா தலைமையிலான இந்திய அணி கடுமையான விமர்சனத்திற்கு உள்ளானதற்கு முக்கிய காரணம் அதன் பேட்டிங் ஃபார்ம்தான். பந்து சீம் ஆனாலும் சரி, நன்றாக திரும்பினாலும் சரி இந்திய பேட்டர்கள் கடுமையாக சொதப்புகிறார்கள்.
பந்துவீச்சும் சுமாராக இருந்தாலும் பேட்டிங்கின் தரம் சொல்லிக்கொள்ளும் அளவுக்கு கூட இல்லை. குறிப்பாக சீனியர்கள் ரோஹித், விராட்டின் பொறுப்பேற்ற ஆட்டம் ரசிகர்களுக்கும், வல்லுநர்களுக்கும் மனவேதனையை அளிக்கின்றன.
அதேபோல் இந்திய அணி கடந்த போட்டியில் 5 பேட்டர்கள், 1 விக்கெட் கீப்பர் பேட்டர், 3 ஆல்-ரவுண்டர் என 9 பேட்டர்களுடன் களமிறங்கியது.
ஆகாஷ் தீப் மற்றும் பும்ரா மட்டுமே 3 ஆல்-ரவுண்டர்களும் தரமானவர்கள்தான் என்றாலும் 9ஆவது இடம்வரை டெஸ்ட் கிரிக்கெட்டில் உங்களுக்கு பேட்டர்தான் வர வேண்டும் என்றால் அது சரியானது இல்லை. உங்களின் பேட்டிங் ஆர்டர் மீது உங்களுக்கே நம்பிக்கை என்று அர்த்தம்.
இருப்பினும் இத்தனை ஆண்டுகாலம் இது இந்திய அணிக்கு சிறப்பாக கைக்கொடுத்தது என்பதால் அதை ரோஹித் சர்மா கைவிடமாட்டார்.
இருப்பினும், அஸ்வினை அடுத்த போட்டியில் அமரவைத்து குல்தீப் யாதவுக்கு வாய்ப்பு வழங்கலாம் என நெட்டிசன்கள் கூறுகின்றனர்.
ஆனால் அதற்கு வாய்ப்பு மிக மிக குறைவு. வேண்டுமென்றால் ஆகாஷ் தீப்புக்கு பதில் வழங்கப்பட்டு சிராஜ் விளையாடலாம்.
இல்லையெனில் வான்கடேவும் சுழற்பந்துவீச்சுக்கு சாதகமாக அமைக்கப்பட்டால் ஒரு வேகப்பந்துவீச்சாளரை வெளியே வைத்துவிட்டு குல்தீப் யாதவ் அல்லது அக்சர் பட்டேல் களமிறக்கப்படலாம்.
பேட்டிங் ஆர்டரில் கேஎல் ராகுலுக்கு மீண்டும் வாய்ப்பு வழங்கப்படுமா அல்லது சர்ஃபராஸ் கானே தொடர்வாரா என்பதும் ரோஹித் – கம்பீர் இணையே முடிவு செய்யும் எனலாம்.