இலங்கை

இலங்கையில் எதிரணிகளின் கூட்டு அரசியல் சமர் 21 ஆம் திகதி ஆரம்பம்!

தேசிய மக்கள் சக்தி அரசாங்கத்தின் ஏதேச்சாதிகாரப் பயணத்தைக் கண்டித்தும், மக்களுக்கான ஜனநாயக உரிமைகளைப் பாதுகாக்குமாறு வலியுறுத்தியும் எதிர்க்கட்சிகள் கூட்டு அரசியல் சமரை முன்னெடுக்கத் தீர்மானித்துள்ளன.

இது தொடர்பில் மக்களுக்குத் தெளிவுபடுத்தும் பிரமாண்ட கூட்டத்தை எதிர்வரும் நவம்பர் 21 ஆம் திகதி பிற்பகல் 2 மணிக்கு நுகேகொடையில் நடத்துவதற்குத் திட்டமிடப்பட்டுள்ளது.

எதிர்க்கட்சிகள் ஒன்றிணைந்து கொழும்பில் இன்று ஊடகச் சந்திப்பை நடத்தின. இதன்போதே முன்னாள் அமைச்சர் உதய கம்மன்பில மேற்படி தகவலை வெளியிட்டார்.

மக்களின் வாழும் உரிமையைப் பாதுகாக்க வேண்டும், ஜனநாயக உரிமைகளைப் பாதுகாக்க வேண்டும் என நினைப்பவர்கள் நிச்சயம் இக்கூட்டத்தில் பங்கேற்க வேண்டும் என்று உதய கம்மன்பில அழைப்பு விடுத்தார்.

2015 ஜனாதிபதித் தேர்தலில் மஹிந்த ராஜபக்ச தோல்வி அடைந்த பின்னர், மஹிந்த சூறாவளி எனும் பிரச்சாரம் நுகேகொடையில் இருந்தே ஆரம்பமானது என்பது குறிப்பிடத்தக்கது.

(Visited 5 times, 5 visits today)

SR

About Author

You may also like

அரசியல் இலங்கை

இலங்கைக்கான சர்வதேச நாணய நிதிய உதவிச்செயற்திட்டம் மார்ச் 20 ஆம் திகதி பணிப்பாளர் சபையிடம் சமர்ப்பிக்கப்படும்

இலங்கைக்கான சர்வதேச நாணய நிதியத்தின் உதவிச்செயற்திட்டத்தை எதிர்வரும் 20 ஆம் திகதி நாணய நிதியப் பணிப்பாளர் சபையிடம் சமர்ப்பிப்பதற்கு எதிர்பார்த்திருப்பதாக சர்வதேச நாணய நிதியத்தின் நிறைவேற்றுப்பணிப்பாளர் கிறிஸ்டலினா
இலங்கை செய்தி

இலங்கையில் பெண்களுக்கு எதிரான சைபர் துன்புறுத்தல்கள் அதிகரிப்பு!

இலங்கையில் பெண்களுக்கு எதிரான சைபர் துன்புறுத்தல்கள் அதிகரிப்பு! இலங்கையில் பெண்களிற்கு எதிரான சைபர் துன்புறுத்தல்கள் அதிகரித்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. பெண் பாராளுமன்ற உறுப்பினர்கள் குழு பெண்களிற்கு எதிரான சைபர்