இஸ்ரேல் பிரச்சினை – ஆஸ்திரேலியாவில் ஏற்பட்டுள்ள சிக்கல்
ஹமாஸ் அமைப்புக்கும் இஸ்ரேலுக்கும் இடையிலான இராணுவ மோதல்கள் காரணமாக, உலகம் முழுவதும் எரிபொருள் விலை அதிகரிக்கலாம் என எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
வரும் நாட்களில் ஒரு பேரல் கச்சா எண்ணெய் விலை 100 அமெரிக்க டொலர்களை தாண்டும் என கணிக்கப்பட்டுள்ளது.
அவுஸ்திரேலியாவிலும் எரிபொருள் விலை அதிகரிப்பை எதிர்பார்க்கலாம் என பொருளாதார நிபுணர்கள் தெரிவித்துள்ளனர்.
தற்போது ஒரு லீற்றர் பெற்றோலின் விலை தொடர்ந்து 7வது வாரமாக 02 டொலர்களை தாண்டி செல்வதை காணமுடிகிறது.
இந்த நிலை கிறிஸ்மஸ் சீசன் முடியும் வரை நீடிக்கலாம் என அத்துறை நிபுணர்கள் கணித்துள்ளனர்.
எரிபொருளின் விலையுடன், மற்ற அனைத்து பொருட்கள் மற்றும் சேவைகளின் விலைகளும் அதற்கேற்ப உயரலாம் என்று கணிக்கப்பட்டுள்ளது.
(Visited 12 times, 1 visits today)