இணைய பாதுகாப்பை உயர்த்திய சர்வதேச குற்றவியல் நீதிமன்றம்!
நெதர்லாந்தில் உள்ள ஹேக் நகரை தலைமையிடமாகக் கொண்ட சர்வதேச குற்றவியல் நீதிமன்றம் இணைய பாதுகாப்பை பலப்படுத்தியுள்ளது.
நெதர்லாந்தின் “ஹோஸ்ட் ஸ்டேட்” மற்றும் வெளிப்புற சைபர் பாதுகாப்பு தொடர்பான பிரச்சினைகள் எழுந்த நிலையில் மேற்படி நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.
“இதுவரை கிடைத்துள்ள ஆதாரங்கள், உளவு பார்க்கும் நோக்கத்துடன் இலக்கு வைக்கப்பட்ட மற்றும் அதிநவீன தாக்குதலைக் குறிக்கிறது” என ஐசிசி நீதிமன்றம் தெரிவித்துள்ளது.
“எனவே இந்தத் தாக்குதலை நீதிமன்றத்தின் ஆணையைக் குறைமதிப்பிற்கு உட்படுத்தும் தீவிர முயற்சியாக விளக்கலாம் என்றும், நீதிமன்றத்தில் ஒப்படைக்கப்பட்ட குறிப்பிட்ட தரவு சமரசம் செய்யப்பட்டதற்கான ஆதாரம் கண்டறியப்பட்டால், பாதிக்கப்பட்டவர்கள் உடனடியாகவும் நேரடியாகவும் நீதிமன்றத்தால் தொடர்பு கொள்ளப்படுவார்கள் எனவும் வலியுறுத்தியுள்ளது.