உயிர் காக்க பயன்படுத்தப்பட்ட ஊசி : இறுதியில் மோடல் அழகிக்கு நேர்ந்த துயரம்!
மலேசியாவில் பிறந்து சிங்கப்பூரில் தனக்கென ஒரு அடையாளத்தை பதித்த மோடல் அழகி ஒருவர் ஒரே ஒரு ஊசியால் தனது இரு கைகள் மற்றும் கால்களை இழந்துள்ளார்.
லின் ஐ லிங் என்ற பெயர் கொண்ட அழகி ஒருவர் வயிற்றுபோக்கு காரணமாக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
முதலில் அவர் தனக்கு சாப்பாட்டு ஒவ்வாமையால் இந்த விளைவு ஏற்பட்டுள்ளதாக கருதியுள்ளார். ஆனால் உண்மையில் அவருடைய இதயத்தில் பக்றீரியா தொற்று இருப்பது பின்னர் கண்டறியப்பட்டுள்ளது.
இதனையடுத்து அவருடைய இதயம் செயலிழந்து வருவதாகவும், இந்த நிலை தொடர்ந்தால் அவர் மூளைசாவடைவார் என்றும் வைத்தியர்கள் குடும்பத்தினரிடம் தெரிவித்துள்ளனர்.
இருப்பினும் அதிர்ஷடவசமாக ஒரே ஒரு மருத்து ஊசி அவருடைய இதயத்தை காக்கும் என பரிந்துரைக்கப்பட்டது. இருப்பினும் அந்த ஊசி பாரிய பக்கவிளைவுகளை ஏற்படுத்தும் என வைத்தியர்கள் தெரிவித்துள்ளனர்.
அவருடைய உயிரை காப்பாற்றுவதற்காக ஒருவழியாக அந்த ஊசி செலுத்தப்பட்டுள்ளது. ஆனால் சில நாட்களில் அவருடைய இரு கைகளும், கால்களிலும் கருப்பு நிற பூஞ்சை போன்று உருவாகி ஒவ்வாமை ஏற்பட்டது.
இதனைத் தொடர்ந்து அவர் தனது இரு கை மற்றும் கால்களை இழந்துள்ளதாக அறிவித்துள்ளனர். உயிரை காப்பாற்ற செலுத்தப்பட்ட ஊசி இரு அவையங்களை எடுத்துச் சென்றதாக அவர் கூறியுள்ளார்.
இந்த சிகிச்சையை செய்வதற்காக அவர் ஏறக்குறைய GBP 170,000 செலவழித்ததாக கூறியுள்ளார்.