இலங்கை மீது இந்திய அரசு பொருளாதார தடை விதிக்க வேண்டும்! சீமான் வலியுறுத்தல்
இலங்கை மீது இந்திய அரசு பொருளாதார தடை விதிக்க வேண்டும் என நாம் தமிழர் கட்சி தலைவர் சீமான் வலியுறுத்தியுள்ளார் .
தூத்துக்குடி விமான நிலையத்தில் செய்தியாளர்களிடம் பேசிய அவர், சட்டவிரோதமாக எல்லை தாண்டி வரும் இந்திய மீனவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என இலங்கை அதிபர் அனுரகுமார திசாநாயக்க கூறியதை சுட்டிக்காட்டினார் .
“இலங்கையில் தமிழர்கள் சுடப்பட்டுள்ளனர், அவர்களின் மீன்பிடி வலைகள் அழிக்கப்பட்டுள்ளன,” என்று அவர் கூறியுள்ளார்.
தமிழக மீனவர்களுக்கு எதிராக இலங்கை என்ன நடவடிக்கை எடுக்கப் போகிறது என்றும், இந்தியப் பெருங்கடலில் மீன்பிடிக்க மீனவர்களுக்கு உரிமை இல்லையா என்றும் அவர் கேள்வி எழுப்பினார்.
இப்பிரச்னைகளுக்கு தீர்வு காண இந்திய அரசு இலங்கை மீது பொருளாதார தடைகளை விதித்து கச்சத்தீவை மீட்க வேண்டும் என சீமான் கூறினார்.





