இலங்கையில் முட்டை விலையில் ஏற்படவுள்ள அதிகரிப்பு!

இலங்கையில் பண்டிகைக் காலத்தில் சந்தையில் முட்டைக்கு தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளதாகவும், விலையை அதிகரிப்பதற்கான ஏற்பாடுகள் மேற்கொள்ளப்பட்டு வருவதாகவும் தெரிவிக்கப்படுகிறது.
இதேவேளை, எதிர்வரும் திங்கட்கிழமை முதல் உள்ளூர் முட்டை ஒன்றின் விலை 65 ரூபாவாக அதிகரிக்கலாம் என அகில இலங்கை முட்டை வர்த்தக சங்கத்தின் தலைவர் அன்டன் அப்புஹாமி தெரிவித்துள்ளார்.
தற்போது சந்தையில் முட்டையின் விலை 60 ரூபாயாக உள்ளது
இதற்கிடையில், 43 ரூபா விலையில் சதொச விற்பனை நிலையங்கள் மூலம் வழங்கப்பட்டு வந்த இறக்குமதி செய்யப்பட்ட முட்டைகள் தற்போது அந்த விற்பனை நிலையங்களில் கிடைக்கவில்லை என வாடிக்கையாளர்கள் விசனம் தெரிவிக்கின்றனர்.
(Visited 23 times, 1 visits today)