ஆஸ்திரேலியாவை உலுக்கிய சம்பவம்: 15 பேர் பலி: துப்பாக்கிதாரிகள் அடையாளம்!
சிட்னியில் யூத சமூகத்தை இலக்கு வைத்து 50 வயதான சஜிட் அக்ரம் மற்றும் 24 வயதான நவீட் அக்ரம் ஆகியோரே துப்பாக்கிச்சூடு நடத்தியுள்ளனர் என அடையாளம் காணப்பட்டுள்ளது.
இவர்கள் தந்தை மற்றும் மகன் என தெரியவந்துள்ளது.
50 வயதான நபர் உரிமம் பெற்ற ஆறு துப்பாக்கிகளை வைத்திருந்தார் என பொலிஸ் தரப்பு தெரிவித்துள்ளது.
சிட்னி போண்டி கடற்கரையில் நேற்று நடத்தப்பட்ட துப்பாக்கிச்சூட்டு தாக்குதலில் 10 வயது சிறுமி உட்பட 15 பேர் உயிரிழந்துள்ளனர்.
42 பேர் வைத்தியசாலையில் சிகிச்சைப் பெற்றுவருகின்றனர்.
அதேவேளை, யூத எதிர்ப்பு நடவடிக்கையை ஒழிக்க சகல வித நடவடிக்கைகளும் முன்னெடுக்கப்படும் என்று ஆஸ்திரேலிய பிரதமர் அந்தோனி அல்பானீஸி உறுதியளித்துள்ளார்.





