ஸ்வீடனில் புனித குர்ஆன் எரிக்கப்பட்ட சம்பவம்!! போப் பிரான்சிஸ் ஆழ்ந்த கவலை
ஸ்வீடனில் புனித குர்ஆன் எரிக்கப்பட்ட சம்பவம் குறித்து போப் பிரான்சிஸ் ஆழ்ந்த கவலை தெரிவித்துள்ளார்.
ஐக்கிய அரபுக் குடியரசின் அல்-இத்திஹாத் நாளிதழுக்கு அளித்த பேட்டியில், போப் பிரான்சிஸ் இந்த கவலையை வெளிப்படுத்தியதுடன், மனித சகோதரத்துவம் புத்தகத்தில் வெளியிடப்பட்டுள்ள விழுமியங்களை ஒவ்வொருவரும் தங்கள் இதயங்களில் சுமக்க வேண்டும் என்று கேட்டுக் கொண்டார்.
புனித குர்ஆனின் பிரதிகளை எரிக்கும் செயலால் தான் கோபமும் வெறுப்பும் அடைவதாகவும், எந்த புத்தகமும் அதன் நம்பிக்கையாளர்களுக்கு மதிக்கப்பட வேண்டும் என்றும், பேச்சு சுதந்திரம் மற்றவர்களின் உணர்வுகளை புண்படுத்தும் வகையில் பயன்படுத்தப்பட வேண்டியதல்ல என்றும் போப் பத்திரிகையின் ஆசிரியர் ஹமத் அல்-காபியிடம் கூறினார்.
எதிர்மறையான மற்றும் பொய்யான செய்திகள், நுகர்வோர் கலாச்சாரத்தின் மீதான ஈர்ப்பு, விரோதம், தப்பெண்ணங்கள் போன்றவற்றால் இளைஞர்கள் தங்களை இழந்துவிடக்கூடாது என்றால், அவர்களுக்கு சுதந்திரம், விவேகம் மற்றும் பொறுப்புணர்வை அளித்து உதவ வேண்டும் என்றும் திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள் தனது கூறியுள்ளார்.