கடந்த 03 ஆண்டுகளில் உச்சபட்ச வெப்பநிலை பதிவு! மனிதர்களே காரணம்!
கடந்த மூன்று ஆண்டுகளாக புவி வெப்பமடைதல் அதிகாரித்துள்ளதாக சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.
தொழில்துறைக்கு முந்தைய அளவை விட 1.4C வெப்பநிலையை தாண்டியுள்ளதாக ஆய்வாளர்கள் சுட்டிக்காட்டியுள்ளனர்.
பிரித்தானிய வானிலை அலுவலகம், கிழக்கு ஆங்கிலியா பல்கலைக்கழகம் மற்றும் தேசிய வளிமண்டல அறிவியல் மையத்தின் தரவுகள் இந்த தகவலை வெளியிட்டுள்ளன.
2025 ஆம் ஆண்டு 19 ஆம் நூற்றாண்டின் வெப்பநிலையை விட 1.41 பாகை செல்சியஸ் அதிகமாக பதிவாகியுள்ளதாக சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.
இது தொடர்பில் கருத்து வெளியிட்டுள்ள UEAவின் காலநிலை ஆராய்ச்சி பிரிவின் இயக்குனர் பேராசிரியர் டிம் ஆஸ்போர்ன் (Tim Osborn), பசுபிக் பெருங்கடலில் ஏற்பட்ட இயற்கையான காலநிலை மாறுபாடான எல் நினோ முறையால் முந்தைய இரண்டு ஆண்டுகள் இன்னும் வெப்பமாக இருந்ததாக சுட்டிக்காட்டியுள்ளார்.
2025 ஆம் ஆண்டில் அது பலவீனமடைந்துள்ளதாகவும், மனிதனால் இயக்கப்படும் வெப்பமயமாதல் நிகழ்வு அதிகரித்துள்ளதாகவும் குறிப்பிட்டுள்ளார்.
குறிப்பாக “கிரீன்ஹவுஸ் (Greenhouse gas) வாயு வெளியேற்றத்தின் கூர்மையான குறைப்புகள் இதனை சமநிலைப்படுத்தும் என்றும் அவர் வலியுறுத்தியுள்ளார்.





