செய்தி வட அமெரிக்கா

கிறீன்லாந்தை அமெரிக்காவுடன் இணைக்க டிரம்ப முயற்சி – விற்பனைக்கு இல்லை என அறிவித்த பிரதமர்

கிறீன்லாந்து விற்பனைக்கில்லை என கிறீன்லாந்து பிரதமர் மியுட் எகிட் தெரிவித்துள்ளார்.

உலகின் பெரிய தீவுகளில் ஒன்றான கிறீன்லாந்தை பாதுகாப்பு காரணங்களிற்காக அமெரிக்கா தன்னுடன் இணைத்துக்கொள்ளும் என டொனால்ட் டிரம்ப் தெரிவித்துள்ள நிலையிலேயே கிறீன்லாந்து பிரதமர் இவ்வாறு தெரிவித்துள்ளார்.

கிறீன்லாந்து எங்களுடையது,நாங்கள் விற்பனைக்குரியவர்கள் இல்லை,ஒருபோதும் அது இடம்பெறாது என பிரதமர் மியுட் எகிட் அறிக்கையொன்றில் தெரிவித்துள்ளார்.

முன்னதாக டென்மார்க்கிற்கான அமெரிக்காவின் புதிய தூதுவர் நியமனம் குறித்து விடுத்த அறிக்கையில் ஜனாதிபதியாக தெரிவு செய்யப்பட்டுள்ள டொனால்ட் டிரம்ப் தேசிய பாதுகாப்பு மற்றும் உலகம் முழுவதும் சுதந்திரம் ஆகியவற்றை கருத்தி;ல் கொண்டு? கிறீன்லாந்தின் உரிமை தன்னிடம் இருப்பது அவசியம் என அமெரிக்கா கருதுகின்றது என குறிப்பிட்டிருந்தார்.

டென்மார்க் பிரதமரின் அலுவலகம் டிரம்பின் இந்த கருத்தினை நிராகரித்திருந்ததுடன் கிறீன்லாந்து விற்பனைக்கில்லை என தெரிவித்திருந்தது.

2019 ஆம் ஆண்டு டென்மார்க் கிறீன்லாந்து விற்பனைக்கில்லை என தெரிவித்ததை தொடர்ந்து டிரம்ப் அந்த நாட்டிற்கான விஜயத்தை இரத்துச்செய்திருந்தார். கிறீன்லாந்தில் 55000 பேர் வசிக்கின்றமை குறிப்பிடத்தக்கது.

(Visited 41 times, 1 visits today)

SR

About Author

You may also like

செய்தி

பாணின் விலை குறைப்பு!

450 கிராம் பாண் ஒன்றின் விலையை 10 ரூபாவினால் குறைப்பதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளது. இதன்படி   இன்று (08) நள்ளிரவு முதல் இந்த விலை அமுலுக்குவரும் என அகில இலங்கை
செய்தி

உள்ளுராட்சி தேர்தல் : தபால் மூல வாக்களிப்புக்கான திகதி அறிவிப்பு!

உள்ளூராட்சி மன்றத் தேர்தலுக்கான தபால் மூல வாக்கெடுப்புக்களை இம்மாதம் 28ஆம் திகதி முதல் 31ஆம் திகதி வரை நடத்துவதற்கு தீர்மானித்துள்ளதாக தேர்தல்கள் ஆணைக்குழு தெரிவித்துள்ளது. நிதி நெருக்கடி