நிலம் வாங்க 05 மில்லியன், வீடு கட்ட 05 மில்லியன் வழங்கும் அரசாங்கம்!
முந்தைய அரசாங்கங்கள் மக்களுக்கு போதுமான இழப்பீடுகளை வழங்காததன் காரணமாகவே நிலச்சரிவு அபாயம் உள்ள பகுதிகளில் இருந்து வெளியேற மக்கள் தயங்கியதாக சுற்றுச்சூழல் அமைச்சர் தம்மிக படபெந்தி தெரிவித்துள்ளார்.
முந்தைய அரசாங்கங்கள் நிலம் வாங்க 10 இலட்ச ரூபாவும், வீடு கட்ட 04 இலட்சம் ரூபாவும் வழங்கிய நிலையில் மக்கள் தயக்கம் காட்டியதாக அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.
ஆனால் தற்போதைய அரசாங்கம் நிலம் வாங்க 05 மில்லியன் ரூபாவும், வீடு கட்ட 05 மில்லியன் ரூபாவும் முன்மொழிந்துள்ளதால் மக்கள் அந்த இடங்களில் இருந்து வெளியேறுவார்கள் எனவும் அவர் நம்பிக்கை வெளியிட்டுள்ளார்.
நாட்டில் வெள்ளம் மற்றும் நிலச்சரிவுகள் போன்ற இயற்கை பேரழிவுகளைத் தணிக்க நீண்ட காலமாக நிலுவையில் உள்ள ஒரு பொறிமுறையை உருவாக்க சுற்றுச்சூழல் அமைச்சகம் விவாதங்களைத் தொடங்கியுள்ளதாகவும் அவர் மேலம் கூறியுள்ளார்.
பேரிடர் மேலாண்மை மையம் (DMC), வானிலை ஆய்வுத் துறை போன்ற பிற தொடர்புடைய நிறுவனங்களுடன் நன்கு ஒருங்கிணைந்த ஒரு வழிமுறை இருக்கும் என்றும், இந்த முயற்சியில் சர்வதேச அமைப்புகளின் உதவியும் பெறப்படும் என்றும் அவர் கூறினார்.
சில தனிமைப்படுத்தப்பட்ட திட்டங்கள் இருந்தபோதிலும், இயற்கை பேரழிவுகளைத் தணிக்க முந்தைய அரசாங்கங்களால் முறையான வழிமுறை அறிமுகப்படுத்தப்படவில்லை என்றும் அமைச்சர் குற்றம் சாட்டியுள்ளார்.




