ஆஸ்திரேலியா

ஆஸ்திரேலியாவில் தந்தையின் கார் மோதியதில் சிறுமிக்கு நேர்ந்த கதி

ஆஸ்திரேலியாவில் தந்தையின் கார் மோதியதில் ஒன்றரை வயது சிறுமி உயிரிழந்துள்ளார்.

சிட்னியின் துங்காபி பகுதியில் வசித்து வந்த சிறுமியே இவ்வாறு உயிரிழந்துள்ளார்.

உயிரிழந்த சிறுமியின் தந்தை தனது காரை வீட்டின் முன் திருப்பும்போது சிறுமி விபத்துக்குள்ளாகியுள்ளார்.

தந்தை வீட்டை விட்டு வெளியேறிய போது குழந்தையும் அவரை பின்தொடர்ந்து சென்றுள்ள நிலையில் அவர் அருகில் குழந்தை நின்றதை அவர் அவதானிக்கவில்லை என தெரிவிக்கப்படுகிறது.

எனினும் மருத்துவமனைக்கு கொண்டு செல்லும் போது சிறுமி உயிரிழந்துள்ளார்.

மேலதிக விசாரணைகளுக்காக சிறுமியின் தந்தை பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளார்.

இவ்வாறான விபத்துகளினால் வருடாந்தம் 4 வயதுக்குட்பட்ட 8 சிறுவர்கள் இறப்பதாகவும் கிட்டத்தட்ட 60 சிறுவர்கள் காயமடைவதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

SR

About Author

You may also like

ஆஸ்திரேலியா செய்தி

ஆர்ப்பாட்டகாரர்களால் முற்றுகையிடப்பட்ட அவுஸ்திரேலிய நாடாளுமன்றம்!

அவுஸ்திரேலிய அரசாங்கத்தின் குடியேற்றவாசிகள் குறித்த கொள்கைக்கு எதிர்ப்பு தெரிவித்து அவுஸ்திரேலிய நாடாளுமன்றத்தின் முன்னால் நூற்றிற்கும் மேற்பட்டவர்கள் இன்று ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். தற்காலிக பாதுகாப்பு மற்றும் செவ்விசாவைவைத்திருக்கும் 19000
ஆஸ்திரேலியா செய்தி

அவுஸ்திரேலிய தேர்தலில் களமிறங்கிய இலங்கை தமிழ் இளைஞன்

மே 27 நடைபெற உள்ள அவுஸ்திரேலியாவின் பெடரல் தேர்தலில் தமிழர்களும் களம்பிறக்கப்பட்டுள்ளனர். அந்த வகையில் கிரீன் கட்சி சார்பாக செல்வன் சுஜன் அவர்கள் களமிறங்கப்பட்டுள்ளார். அவுஸ்திரேலியாவில் மனித
error: Content is protected !!