ஜேர்மனி அரசாங்கம் பரிசீலித்து வரும் புதிய திட்டம் : 18 வயது இளைஞர்களுக்கு கிட்டும் வாய்ப்பு!
உக்ரைன் – ரஷ்ய போர் நேட்டோ நாடுகள் மத்தியில் அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது. ஸ
எந்நேரத்திலும் ரஷ்ய அதிபர் புட்டின் நேட்டா நாடுகள் மீது தாக்குதல் நடத்தலாம் என்றும் இது ஐரோப்பாவில் மூன்றாம் உலகப் போரை ஏற்படுத்துவதற்கான சாத்தியக்கூறுகளை கொண்டிருப்பதாகவும் நிபுணர்கள் எச்சரிக்கை விடுத்துள்ளனர்.
இந்நிலையில் ஐரோப்பிய நாடுகள் தங்கள் நாட்டின் இராணுவ பலத்தை அதிகரிக்க தேவையான முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகின்றனர்.
அந்தவகையில் ஜேர்மனியில் இளைஞர்களை இராணுவத்தில் சேர்க்கும் பணி விரைவில் முன்னெடுக்கப்படும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
நாட்டில் உள்ள அரசியல் தலைவர்கள் அதன் ஆயுதப் படைகளை வலுப்படுத்தும் முயற்சியில் கட்டாயமாக மூன்று சாத்தியமான வடிவங்களை ஆராய்ந்து வருவதாக கூறப்படுகிறது.
அந்நாட்டின் பாதுகாப்பு அமைச்சகம் வெளியிட்டுள்ள அறிக்கையின்படி 18 வயது பூர்தியடைந்த இளைஞர்கள் இராணுவ சேர்க்கையில் ஈடுபடலாம் என்றும், குறைந்தது வருடத்திற்கு 40 ஆயிரம் துருப்புகளை புதிதாக இணைத்துக்கொள்ளவுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
அதேநேரம் 18 வயதை அடையும் போது இளைஞர்கள் மற்றும் பெண்களுக்கு ஒரு வருட கட்டாய இராணுவ நடவடிக்கை அறிமுகப்படுத்தப்படும். இதற்கு ஒரு சட்ட மாற்றம் கொண்டுவரப்பட வேண்டும் என்றும் வலிறுத்தப்பட்டுள்ளது.