திடீரென இடிந்து விழுந்த மேம்பாலம்

இந்தியாவில் கட்டப்பட்டு வரும் பிரமாண்ட மேம்பாலம் இடிந்து விழுந்தது.
மகாராஷ்டிர மாநிலம் ரத்னகிரி மாவட்டத்தில் உள்ள சிப்லுன் என்ற இடத்தில் பாலம் ஒன்று இடிந்து விழுந்துள்ளதாக இந்திய ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.
இதேவேளை, மேம்பாலம் இடிந்து வீழ்ந்தமையினால் உயிரிழப்போ அல்லது காயங்களோ ஏற்படவில்லை என ஊடகங்கள் மேலும் செய்தி வெளியிட்டுள்ளன.
கடந்த காலங்களில், இந்தியாவில் கட்டப்பட்டு வரும் பாலங்கள் இடிந்து விழுந்த சம்பவங்கள் பல நடந்துள்ளமை குறிப்பிடத்தக்கது.
(Visited 10 times, 1 visits today)