போக்குவரத்து துறையில் புரட்சியை ஏற்படுத்திய பறக்கும் உந்துருளி

சீனாவின் BYD நிறுவனம் ஜப்பானில் பறக்கும் உந்துருளியை அறிமுகப்படுத்தி போக்குவரத்துத் துறையில் புரட்சியை ஏற்படுத்தியுள்ளது.
இதன் மதிப்பு 2,999 அமெரிக்க டொலர்கள் என சர்வதேச ஊடகங்கள் தெரிவிக்கின்றன.
போக்குவரத்து நெரிசல் மற்றும் சுற்றுச்சூழல் மாசுபடுவதைக் குறைப்பதற்கு இந்த பறக்கும் உந்துருளி ஒரு தீர்வாக அமையும் எனத் தெரிவிக்கப்படுகின்றது.
குறித்த உந்துருளியானது தரையிலிருந்து சுமார் ஒரு அடி உயரத்தில் பறக்கக் கூடிய வகையில் அமைக்கப்பட்டுள்ளது.
அதிகபட்சமாக மணிக்கு 60 மைல்கள் வேகத்தில் பயணிக்க கூடியது எனவும் ஒரு முறை மின்னேற்றினால் 30 மைல்கள் பறக்க கூடியது எனவும் சர்வதேச ஊடகங்கள் தெரிவிக்கின்றன.
(Visited 2 times, 2 visits today)