October 22, 2025
Breaking News
Follow Us
இலங்கை

இலங்கையில் வாக்குப் பெட்டிகள் விநியோகிக்கும் முதற்கட்ட செயற்பாடுகள் ஆரம்பம்!

இலங்கையில் நாளை இடம்பெறவுள்ள ஜனாதிபதித் தேர்தலுக்காக வாக்குப் பெட்டிகள் அனுப்பி வைக்கப்பட்டுள்ளது.

அதற்கமைய, அதிகாரிகளை வாக்களிப்பு மையங்களுக்கு அனுப்பி வைக்கும் முதற்கட்ட செயற்பாடுகள் இன்று காலை முதல் ஆரம்பமாகியுள்ளன.

நாடளாவிய ரீதியில் உள்ள 13,421 வாக்களிப்பு மையங்களுக்கு வாக்குப் பெட்டி மற்றும் அதிகாரிகள் அனுப்பி வைக்கப்படவுள்ளனர்.

இந்த தேர்தலுக்காக ஒரு கோடியே 71 இலட்சத்து 41,354 பேர் வாக்களிக்கத் தகுதி பெற்றுள்ளனர்.

அதற்காக நாடளாவிய ரீதியாக 13,421 வாக்களிப்பு நிலையங்கள் ஸ்தாபிக்கப்பட்டுள்ளன.

வாக்கெண்ணும் பணிகளுக்காக 1,713 நிலையங்கள் ஸ்தாபிக்கப்பட்டுள்ளன.

இதேவேளை, நாடளாவிய ரீதியாக ஸ்தாபிக்கப்பட்டுள்ள வாக்களிப்பு நிலையங்களுக்கு அண்மித்த பகுதிகளில் விசேட பாதுகாப்பு ஏற்பாடுகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன.

(Visited 91 times, 1 visits today)

SR

About Author

You may also like

அரசியல் இலங்கை

இலங்கைக்கான சர்வதேச நாணய நிதிய உதவிச்செயற்திட்டம் மார்ச் 20 ஆம் திகதி பணிப்பாளர் சபையிடம் சமர்ப்பிக்கப்படும்

இலங்கைக்கான சர்வதேச நாணய நிதியத்தின் உதவிச்செயற்திட்டத்தை எதிர்வரும் 20 ஆம் திகதி நாணய நிதியப் பணிப்பாளர் சபையிடம் சமர்ப்பிப்பதற்கு எதிர்பார்த்திருப்பதாக சர்வதேச நாணய நிதியத்தின் நிறைவேற்றுப்பணிப்பாளர் கிறிஸ்டலினா
இலங்கை செய்தி

இலங்கையில் பெண்களுக்கு எதிரான சைபர் துன்புறுத்தல்கள் அதிகரிப்பு!

இலங்கையில் பெண்களுக்கு எதிரான சைபர் துன்புறுத்தல்கள் அதிகரிப்பு! இலங்கையில் பெண்களிற்கு எதிரான சைபர் துன்புறுத்தல்கள் அதிகரித்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. பெண் பாராளுமன்ற உறுப்பினர்கள் குழு பெண்களிற்கு எதிரான சைபர்