சிங்கப்பூரில் பணியாற்றிய வெளிநாட்டு ஊழியருக்கு நேர்ந்த கதி
சிங்கப்பூரில் பணியாற்றிய வெளிநாட்டு ஊழியர் மரணமடைந்தார்.
யீஷூன் ரிங் வீதியில் உள்ள கட்டுமானத் தளத்தில் இந்த சம்பவம் இடம்பெற்றுள்ளது.
நேற்று முன்தினம் மாலை புளோக் 413 அருகே இருக்கும் கட்டுமானத் தளத்தில் ஆடவர் எஃகு சட்டம் ஒன்றை தள்ளிச் சென்றுக்கொண்டிருந்தபோது அது அவர் மீது விழுந்ததாக மனிதவள அமைச்சு குறிப்பிட்டுள்ளது.
மருத்துவமனையில் சேர்க்கப்பட்ட சீனாவைச் சேர்ந்த அந்த 55 வயது ஆடவர் பின்னர் உயிரிழந்ததாக சிங்கப்பூர்க் குடிமைத் தற்காப்புப் படை கூறியது.
கட்டுமானத் தளத்தில் பொதுவாக அத்தகைய எஃகு சட்டங்கள் நகர்த்தப்படும்போது அவை அசையாமல் இருக்கத் தகுந்த கருவிகள் பயன்படுத்தப்படும்.
இந்நிலையில் ஆடவர் எப்படி உயிரிழந்துள்ளார் என்பது விசாரிக்கப்படுகிறது.
ஆடவர் பணிபுரிந்த Jin Shan Construction நிறுவனத்துக்கு அனைத்துப் பணிகளையும் தற்போதைக்கு நிறுத்தும்படி உத்தரவிடப்பட்டுள்ளதாக மனிதவள அமைச்சு சொன்னது.