கடற்தொழிலுக்காகச் சென்ற மீனவருக்கு நேர்ந்த கதி!
திருகோணமலை-பாட்டாளிபுரம் கிராமத்திலிருந்து கடற்தொழிலுக்காகச் சென்ற மீனவர் மீட்கப்பட்டு மூதூர் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
பாட்டாளிபுரத்தைச் சேர்ந்த உதுமாலெப்பை முஸ்தபா என்ற மீனவர் (11-08-2023) காலை வரை கரை திரும்பாமை மற்றும் அவரது தொலைபேசி இயங்காமை போன்ற காரணங்களினால் பொலிஸ் கடற்படை பிரதேச செயலாளர் போன்றோரிடம் முறைப்பாடுகள் செய்யப்பட்டதுடன் கடற்றொழில் அமைச்சருக்கும் அறிவிக்கப்பட்டது.
எனினும் சீனன் வெளி மீனவர் சங்கத்தினர் கடற் சீற்றத்தையும் பொருட்படுத்தாமல் மேற் கொண்ட தேடுதலின் பயனாக இன்று (12-08-2023) மாலை அவர் பயன்படுத்திய நங்கூரமறுந்து ஆழ் கடலுக்கு இழுத்துச் செல்லப் பட்ட போது திரும்பி வருவதற்கு எரிபொருளின்றி தவித்த வேளையில் ஆழ் கடல் மீன் பிடியில் ஈடுபட்டுக் கொண்டிருந்த றோலர் படகால் காப்பாற்றப்பட்ட நிலையில் மீட்கப்பட்டுள்ளார்.
உணவு நீரின்மையாலும், கடுமையான கடல் சீற்றத்தாலும் பாதிப்புற்று சோர்வடைந்திருந்த அம்மீனவர் 1990 அவசர அம்பூலன்ஸ் சேவை மூலமாக வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.