காதலனுடன் ஒலிம்பிக் கிராமத்தை விட்டு சென்ற பிரேசில் நீச்சல் வீராங்கனுக்கு நேர்ந்த கதி
பிரேசிலைச் சேர்ந்த நீச்சல் வீராங்கனையான அனா கரோலினா வியேரா, தனது காதலனுடன் ஒலிம்பிக் கிராமத்தை விட்டு ரகசியமாக வெளியேறிய குற்றச்சாட்டின் பேரில் உடனடியாக பாரிஸை விட்டு வெளியேற உத்தரவிடப்பட்டுள்ளது.
வியேராவின் காதலன், பிரேசிலிய நீச்சல் வீரரான கேப்ரியல் சாண்டோஸ், ஒழுக்கமின்மைக்காக ஒரு எச்சரிக்கை மட்டுமே கொடுக்கப்பட்டதாக கூறப்படுகிறது.
எந்தவொரு அதிகாரப்பூர்வ அனுமதியும் இன்றி தம்பதியினர் ஒலிம்பிக் கிராமத்தை விட்டு பாரிஸில் இரவு வாழ்க்கையை அனுபவிக்க சென்றதாக குற்றம் சாட்டப்பட்டுள்ளது.
.
இவர்களின் வருகையின் போது எடுக்கப்பட்ட சில புகைப்படங்களை சமூக ஊடகங்களில் வெளியிட்டதையடுத்து இது தொடர்பில் அதிகாரிகளின் கவனத்திற்கு கொண்டுவரப்பட்டது.
இது தொடர்பான ஒழுக்காற்று நடவடிக்கையை அனா கரோலினா அவமரியாதை மற்றும் ஆக்ரோஷமான முறையில் எதிர்த்ததாக பிரேசில் ஒலிம்பிக் அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
22 வயதான கரோலினா வியேரா, 4×100 மீட்டர் ப்ரீஸ்டைல் நீச்சல் குழுவில் உறுப்பினராக இருந்தார், அவர் போட்டியில் 12வது இடத்தைப் பிடித்தார் மற்றும் இறுதிப் போட்டிக்கு தகுதி பெறவில்லை.
பிரேசில் தூதுக்குழுவில் இருந்து நீக்கப்பட்டபோது தான் தனிமைப்படுத்தப்பட்டதாகவும், தான் எந்த முறைகேடுகளிலும் ஈடுபடவில்லை என்றும், தற்போது வழக்கறிஞர்களுடன் ஆலோசனை நடத்தி வருவதாகவும் அவர் கூறியுள்ளார்.