வியட்நாமில் உணவு உட்கொண்ட 500க்கும் மேற்பட்டோருக்கு நேர்ந்த கதி – பலர் ஆபத்தில்
தெற்கு வியட்நாமில் உள்ள ஒரு கடையில் bánh mìயை சாப்பிட்ட 500க்கும் மேற்பட்டோர் உணவு விஷமாகி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
அவர்களில் ஆறு முதல் ஏழு வயதுடைய இரண்டு சிறுவர்கள் உட்பட 12 பேரின் நிலைமை கவலைக்கிடமாக உள்ளதாக வைத்தியசாலை வட்டாரங்கள் தெரிவித்துள்ளன.
இந்த உணவு விற்பனை செய்யப்பட்ட வியட்நாமின் டோங் நாய் மாகாணத்தில் நிறுவப்பட்ட இந்த பேக்கரி தற்காலிகமாக மூடப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது.
தற்போது நிலவும் வெப்பத்தின் காரணமாக இந்த உணவு கெட்டுப் போயிருக்கலாம் என நம்பப்படுகிறது.
ஆனால், பேக்கரியின் முதற்கட்ட சோதனையில், உணவுப் பாதுகாப்புத் தரநிலைகளுக்கு இணங்கவில்லை என்பது தெரியவந்துள்ளது.
Bánh mì என்பது ஒரு பாரம்பரிய வியட்நாமிய சாண்ட்விச் ஆகும், இது குளிர் இறைச்சிகள் மற்றும் காய்கறிகளால் நிரப்பப்பட்ட பிரஞ்சு-பாணி பாகுட் என விவரிக்கப்படுகிறது.