கனடாவில் இருந்து இலங்கை சென்ற சிறார்களுக்கு நேர்ந்த கதி
கனடாவில் இருந்து இலங்கை சென்ற சிறார்கள் இருவர் பாலியல் துன்புறுத்தலுக்குள்ளாகியுள்ளனர்.
இந்த சம்பவத்திற்கு தொடர்புடைய சுற்றுலா வழிக்காட்டி ஒருவரை தேடி பொலிஸார் விசாரணைகளை ஆரம்பித்துள்ளனர்.
16 வயதான சிறுமியும் சிறுவனும் அவர்களது, தந்தையுடன் சுற்றுலாவுக்காக நாட்டுக்கு சில நாட்களுக்கு முன்னர் வருகைத் தந்துள்ளனர்.
சுற்றுலாவின் போது, கொஸ்கொடையில் இருந்து காலி கோட்டையை பார்வையிடுவதற்காக வேனில் பயணித்த இரண்டு சிறுவர்களையும் சுற்றுலா வழிகாட்டி பாலியல் துஷ்பிரயோகத்திற்கு உட்படுத்தியதாக பொலிஸார் தெரிவித்தனர்.
குறித்த பகுதியில் இருந்து, தப்பிச் சென்றுள்ள சந்தேகநபரை தேடி விசாரணைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளன.
(Visited 18 times, 1 visits today)





