கொழும்பில் தந்தை மற்றும் மகளுக்கு நேர்ந்தக் கதி!
கொழும்பில் நீர் தேங்கியிருந்த குழியில் விழுந்து தந்தையும் மகளும் விபத்துக்கு உள்ளாகியுள்ளனர்.
குறித்த சம்பவம் இன்று (19.09) இடம்பெற்றுள்ளது.
மகளை பாடசாலைக்கு அழைத்துச் சென்றபோது, தந்தையும் மகளும், கொத்தட்டுவ IDH நீர் வழங்கல் சபைக்கு அருகாமையில் நீர் தேங்கியிருந்த சுமார் 16 அடி ஆழமுள்ள குழியில் விழுந்து விபத்துக்கு உள்ளாகியுள்ளனர்.
தந்தை மகளை குழியில் இருந்து வெளியே கொண்டு வந்துள்ளதை தொடர்ந்து பிரதேசவாசிகள் அவர்கள் இருவரையும் காப்பாற்றியுள்ளனர்.
இதேவேளை, குடிநீர் குழாய் உடைந்ததன் காரணமாக இவ்வாறு பாரிய குழி ஏற்பட்டுள்ளதாகவும் அப்பகுதியில் நீர் விநியோகம் தடைப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.





