பிரான்ஸ் தலைநகரில் 5 நட்சத்திர ஆடம்பர விடுதியில் இளம் பெண்ணுக்கு நேர்ந்த கதி

பாரிஸில் உள்ள ஐந்து நட்சத்திர ஆடம்பர விடுதியில் வைத்து இளம் பெண் ஒருவர் பாலியல் வல்லுறவுக்கு உட்படுத்தப்பட்டுள்ள நிலையில் வழக்கு தொடுக்கப்பட்டு விசாரணைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளன.
26 வயதுடைய இளம் பெண் ஒருவர் கடந்த ஜனவரி 26 ஆம் திகதி பொலிஸ் நிலையத்துக்குச் சென்று அளித்த புகாரின் அடிப்படையில் இது தெரியவந்துள்ளது.
பரிசில் உள்ள பிரபலமான ஸ்பா நிறுவனம் ஒன்றில் இருந்து மசாஜ் மேற்கொள்வதற்கு ஒருவரை குறித்த இளம் பெண் அழைத்திருந்தார்.
அந்த சந்தர்ப்பத்தை பயன்படுத்தியே குறித்த நபர் இளம் பெண்ணை பாலியல் வல்லுறவுக்கு உட்படுத்தியதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
அவர் பொலிஸாரிடம் அளித்த புகாரினை அடுத்து, பொலிஸார் மேற்படி சம்பவம் தொடர்பில் விசாரணைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளன.
(Visited 24 times, 1 visits today)