ஐரோப்பா செய்தி

பாரிஸில் ஒன்றரை வயது குழந்தைக்கு நேர்ந்த கதி

பிரான்ஸில் ஒன்றரை வயது குழந்தை ஒன்றை வாகனம் ஒன்று மோதித்தள்ளியதில் குழந்தை படுகாயமடைந்துள்ளது.

இச்சம்பவம் நேற்று மார்ச் 25 ஆம் திகதி திங்கட்கிழமை பாரிஸ் சென் மார்ன் நகரில் இடம்பெற்றுள்ளது.

தள்ளுவண்டியில் (stroller) அமர்ந்திருந்த குழந்தையை தள்ளிக்கொண்டு அவரது தயார் வீதியை கடக்க முற்பட்டுள்ளார். அப்போது வீதியில் பயணித்த வாகனம் ஒன்று அவர்களை இடித்து தள்ளியது.

குழந்தை தள்ளுவண்டியுடன் சேர்த்து தூக்கி வீசப்பட்டது. இதில் குழந்தை படுகாயமடைந்துள்ளது. குழந்தை உடனடியாக மீட்கப்பட்டு பரிசில் உள்ள Necker மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டுள்ளது.

குழந்தை உயிராபத்தான நிலையில் இருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. 1972 ஆம் ஆண்டு பிறந்த வாகன சாரதி கைது செய்யப்பட்டு விசாரணைகளுக்கு உட்படுத்தப்பட்டு வருகிறார்.

(Visited 20 times, 1 visits today)

SR

About Author

You may also like

செய்தி

பாணின் விலை குறைப்பு!

450 கிராம் பாண் ஒன்றின் விலையை 10 ரூபாவினால் குறைப்பதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளது. இதன்படி   இன்று (08) நள்ளிரவு முதல் இந்த விலை அமுலுக்குவரும் என அகில இலங்கை
செய்தி

உள்ளுராட்சி தேர்தல் : தபால் மூல வாக்களிப்புக்கான திகதி அறிவிப்பு!

உள்ளூராட்சி மன்றத் தேர்தலுக்கான தபால் மூல வாக்கெடுப்புக்களை இம்மாதம் 28ஆம் திகதி முதல் 31ஆம் திகதி வரை நடத்துவதற்கு தீர்மானித்துள்ளதாக தேர்தல்கள் ஆணைக்குழு தெரிவித்துள்ளது. நிதி நெருக்கடி
error: Content is protected !!