ஐரோப்பா

லாட்வியாவிற்று 305 மில்லியன் யூரோக்களை வழங்கும் ஐரோப்பிய ஒன்றியம்!

லாட்வியாவில் போக்குவரத்து உள்கட்டமைப்பு திட்டங்களை மேம்படுத்த  ஐரோப்பிய ஆணையம்  305 மில்லியன் யூரோக்களை ஒதுக்கியுள்ளது.

2021-2027 நிதிக் காலத்திற்கு ஒதுக்கப்பட்டுள்ள குறித்த நிதியானது  குறிப்பிடத்தக்க முயற்சிகளை ஆதரிப்பதில் முக்கிய பங்கு வகிக்கும் எனவும் எதிர்பார்க்கப்படுகிறது.

நிதியுதவி ஒதுக்கீட்டின் கீழ் மேற்கொள்ளப்படவுள்ள முக்கிய திட்டங்களில் ஒன்று, ரயில் பால்டிகா திட்டம். இது லாட்வியாவில் இணைப்பை மேம்படுத்தவும், போக்குவரத்து துறையை மேம்படுத்தவும் நோக்கமாக கொண்டுள்ளது. இதற்காக 298 மில்லியன் யூரோக்கள் ஒதுக்கப்பட்டுள்ளன.

அத்துடன்  கீழ் லீபாஜா துறைமுகத்தை (Liepaja Sea Port) மேம்படுத்தவும் நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. இதற்காக 6.9 மில்லியன் யூரோ ஒதுக்கப்பட்டுள்ளது.

இதனையடுத்து ஐரோப்பிய விமான போக்குவரத்து  மேலாண்மை திட்டத்தில் பங்கேற்பது லாட்வியாவிற்கு குறிப்பிடத்தக்க வாக்குறுதியைக் கொண்டுள்ளது.

இந்த திட்டம் ஐரோப்பாவின் ஒருங்கிணைந்த விமான போக்குவரத்து நிர்வாகத்தை மேம்படுத்துவதை நோக்கமாகக் கொண்டுள்ளது. இதன் மூலம் பிராந்தியத்திற்குள் பாதுகாப்பு மற்றும் ஒருங்கிணைப்பை மேம்படும் என எதிர்பார்க்கப்பட்டுள்ளது.

(Visited 8 times, 1 visits today)

VD

About Author

You may also like

ஐரோப்பா செய்தி

சாலையோர கடையில் தேநீர் – சாதாரண நபராக மாறிய ஜெர்மனி சான்ஸ்லர்

இந்தியாவுக்கு விஜயம் செய்துள்ள ஜெர்மனி சான்ஸ்லர் ஓலப் ஸ்கோல்ஸ் டில்லியில் உள்ள சாலையோர தேநீர்கடை ஒன்றில் தேநீர் அருந்திய புகைப்படங்கள் சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது. அரசு
ஐரோப்பா செய்தி

ஜெர்மனியில் விசா உள்ளிட்ட ஒட்டுமொத்த சட்டதிட்டத்திலும் மாற்றம்

ஜெர்மனியில் விசா வழங்கும் முறையை மட்டும் அல்லாமல் ஒட்டுமொத்த சட்டதிட்டத்தையும் நவீனப்படுத்த உத்தேசித்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. ஜெர்மனி சான்ஸ்லர் இதனை தெரிவித்துள்ளார். ஐரோப்பாவிலேயே மிகப்பெரிய பொருளாதார நாடாக இருக்கும்
error: Content is protected !!