கிம் ஜாங் உன் ஆட்சிக்கு முடிவு காலம் ஆரம்பம் – தென்கொரியா எச்சரிக்கை

வடகொரியா அணு ஆயுதத்தைப் பயன்படுத்தினால் அதுவே கிம் ஜாங் உன் தலைமையிலான ஆட்சிக்கு முடிவாக இருக்கும் என்று தென் கொரியா எச்சரிக்கை விடுத்துள்ளது.
அணு ஆயுத ஏவுகணைத் தாக்குதல் நடத்தும் வல்லமை கொண்ட அமெரிக்காவின் USS Kentucky போர்க்கப்பல் தென்கொரியாவின் பூசன் துறைமுகத்திற்கு வந்துள்ளது.
தென்கொரியா மற்றும் அமெரிக்க கூட்டுப் பயிற்சிகளின் மீது அணு ஆயுதத்தைப்பயன்படுத்த வடகொரியா முயற்சித்தால் கடுமையாகத் திருப்பி தாக்கப்படும் என்றும் வடகொரியாவுக்கு எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
வடகொரியாவின் ஏவுகணை சோதனைகளும் அணு ஆயுதத் திட்டங்களும் ஐநா.வின் விதிகளை மீறியதாகும் என்றும் தென் கொரிய அமைச்சகம் தெரிவித்துள்ளது.
(Visited 18 times, 1 visits today)