தனது ஆட்சிக் காலத்தில் நாட்டின் பொருளாதாரம் சிறப்பாக இருந்தது!! மஹிந்த பெருமிதம்
தற்போதைய பொருளாதார நெருக்கடி தொடர்பில் முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ ஊடகங்களுக்கு விசேட அறிவித்தல் ஒன்றை விடுத்துள்ளார்.
இதன் மூலம் தான் ஜனாதிபதியாக இருந்த 9 வருட காலப்பகுதியில் இலங்கையின் பொருளாதார வளர்ச்சி 6 வீதத்தை தாண்டியிருந்ததாக முன்னாள் ஜனாதிபதி சுட்டிக்காட்டியுள்ளார்.
மேலும் 2015 ஆம் ஆண்டு நாடு வலுவான பொருளாதாரத்தை பரிசாக வழங்கியதாகவும் அது வரலாற்றில் பதிவாகியுள்ளதாகவும் முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ தனது அறிவிப்பில் சுட்டிக்காட்டியுள்ளார்.
2015 ஆம் ஆண்டு முதல் 2019 ஆம் ஆண்டு வரை இலங்கையின் பொருளாதாரம் வீழ்ச்சியடைந்துள்ள அதேவேளை அண்டை நாடுகள் அனைத்தும் தீவிர பொருளாதார வளர்ச்சியை அடைந்துள்ளதாகவும் அவர் கூறியுள்ளார்.
முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ ஊடகங்களுக்கு விடுத்துள்ள விசேட அறிக்கை ஒன்றில் இந்த விடயங்களை தெளிவுப்படுத்தியுள்ளார்.