உலகை ஆட்டிப்படைக்கும் பொருளாதார நெருக்கடி! 5 ஆண்டுகளைக் கடந்தும் தொடரும் பரிதாபம்

கொரோனா பெருந்தொற்றின் பின்னர் உலகளாவிய ரீதியில் ஏற்பட்ட பொருளாதார நெருக்கடி 5 ஆண்டுகளைக் கடந்தும் தொடர்வதாகத் தெரிவிக்கப்படுகிறது.
சுமார் 5 வருடங்கள் கடந்துள்ள நிலையில் தற்போதும் இதன் தாக்கம் உலகளவில் பாதிப்பை ஏற்படுத்தியுள்ளது. தொழிலாளர் சந்தை பாதிப்பை சந்தித்துள்ளது.
அதே நேரத்தில் தொலைதூர வேலை, டிஜிட்டல் கொடுப்பனவுகள் மற்றும் பயண முறைகளில் ஏற்பட்ட மாற்றங்கள் தற்போது வரை நீடிக்கின்றன.
எனினும் இந்த நடைமுறைகள் தற்போது மக்களுக்குப் பழக்கப்பட்டதும் இது தேவையான ஒன்றாகவும் மாறியுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. 2020 முதல் உலகளாவிய கடன் 12 சதவீத புள்ளிகள் அதிகரித்துள்ளது.
கடன், பணவீக்கம் மற்றும் வட்டி விகிதங்கள் என்பன பல நாடுகளில் தாக்கத்தை ஏற்படுத்தியுள்ளதாக அண்மைய ஆய்வுகளில் தெரியவந்துள்ளது.
பணவீக்கம் 2024 ஆம் ஆண்டு நடைபெற்ற அமெரிக்க ஜனாதிபதி தேர்தலிலும் தாக்கத்தை ஏற்படுத்தியுள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது
உலக வங்கியின் கூற்றுப்படி, கொரேனா தொற்றுநோய் மில்லியன் கணக்கானவர்களுக்கு வேலை வாய்ப்பை இழக்கச் செய்துள்ளது.