தோட்டத் தொழிலாளர்கள் தொடர்பில் ஐக்கிய மக்கள் சக்தி எடுத்துள்ள முடிவு!
மலையக பெருந்தோட்டத் தொழிலாளர்களுக்கு சம்பள உயர்வை வழங்குவதற்கு தமது கட்சி போர்க்கொடி தூக்கியுள்ளது என வெளியாகும் தகவலை பிரதான எதிர்க்கட்சியான தேசிய மக்கள் சக்தி நிராகரித்துள்ளது.
“ மலையக பெருந்தோட்டத் தொழிலாளர்களுக்கு அரசாங்கத்தால் வழங்குவதற்கு முன்மொழியப்பட்டு 200 ரூபா நாளாந்த கொடுப்பனவை நாம் எதிர்க்கவில்லை. அந்த கொடுப்பனவு வழங்கப்பட வேண்டும் என்பதே கட்சியின் நிலைப்பாடாகும்.” என்று ஐக்கிய மக்கள் சக்தியின் நாடாளுமன்ற உறுப்பினர் எஸ்.எம். மரிக்கார் தெரிவித்தார்.
நாடாளுமன்றத்தில் இன்று உரையாற்றுகையிலேயே அக்கட்சியின் சார்பில் மேற்படி அறிவிப்பை அவர் வெளியிட்டார்.
அதேவேளை, தம்மை இடதுசாரி அரசாங்கம் எனக் கூறிக்கொள்ளும் தேசிய மக்கள் சக்தி, இடதுசாரிக் கொள்கைக்கு முரணான விடயங்களையும் பாதீட்டில் முன்வைத்துள்ளது எனவும் அவர் சுட்டிக்காட்டினார்.
அதேபோல மாகாணசபைத் தேர்தலை நடத்துமாறும் கட்சி சார்பில் மரிக்கார் எம்.பி. மீண்டும் வலியுறுத்தினார்.





