நைஜீரியாவில் பெட்ரோல் டேங்கர் வெடித்து சிதறியதில் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 181 உயர்வு!
நைஜீரியாவின் வடக்கு மாநிலமான ஜிகாவாவில் கடந்த வாரம் பெட்ரோல் டேங்கர் வெடித்ததில் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 181ஐ தாண்டியுள்ளதாக அம்மாநில ஆளுநர் உமர் நமாடி செவ்வாய்க்கிழமை தெரிவித்தார்.
நமாடி செய்தியாளர்களிடம் கூறுகையில், அக்டோபர் 15 ஆம் திகதி இரவு, டவுரா உள்ளூர் அரசாங்கப் பகுதியில் உள்ள மஜியா நகரில் பெட்ரோல் டேங்கர் கட்டுப்பாட்டை இழந்து கவிழ்ந்து விபத்துக்குள்ளானதில் குறைந்தது 80 பேர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனர்.
வெடிவிபத்தில் 210 குடும்பங்கள் பாதிக்கப்பட்டுள்ளதாகவும், டேங்கர் கவிழ்ந்ததையடுத்து வடிகால் வாய்க்காலில் கொட்டிய பெட்ரோலை உறிஞ்சுவதற்காக சம்பவ இடத்திற்கு விரைந்தவர்களே பலியானவர்களில் பெரும்பாலானவர்கள் என்றும் அவர் கூறினார்.
பாதிக்கப்பட்ட அனைவருக்கும் மருத்துவக் கட்டணத்தை மாநில அரசு செலுத்தியுள்ளதாகவும், பாதிக்கப்பட்ட குடும்பங்கள் தங்கள் வாழ்வாதாரத்தைத் தொடர்வதை உறுதிசெய்யும் வகையில் செயல்பட்டு வருவதாகவும் அவர் குறிப்பிட்டார்.
மஜியாவில் அக்டோபர் 16ம் திகதி உயிரிழந்தவர்களுக்கு வெகுஜன அடக்கம் செய்யப்பட்டது