யாழில் சிறுமி உயிரிழந்த விவகாரம்; இரு பொலிஸ் அணிகள் களமிறக்கம்

யாழ்ப்பாண பொலிஸ் பிரிவுக்குட்பட்ட கல்வியங்காடு பகுதியில் 17 வயது சிறுமி உயிரிழந்தமை தொடர்பில் விசாரணைகளை மேற்கொள்வதற்காக யாழ்ப்பாண மாவட்ட பிரதி பொலிஸ் மா அதிபரினால் இரண்டு பொலிஸ் அணிகள் நியமிக்கப்பட்டு விசாரணைகள் முன்னெடுக்கப்படுவதாக மாவட்ட பிரதி பொலிஸ் மா அதிபர் தெரிவித்தார்.
உதவி பொலிஸ் அத்தியட்சகர் தலைமையிலான இரண்டு அணிகள் குறித்த சிறுமியின் மரணம் தொடர்பில் விசாரணைகளை மேற்கொண்டு வருவதாகவும் விசாரணையின் பின்னர் உரியய சட்ட நடவடிக்கை முன்னெடுக்க உள்ளதாகவும் தெரிவித்தார்
(Visited 13 times, 1 visits today)