ரஷ்யா – உக்ரைன் போரால் ஏற்பட்டுள்ள ஆபத்து
கிட்டத்தட்ட 175 மில்லியன் டன் கரியமில வாயு காற்றில் கலந்திருப்பதாக கீவ் சுற்றுப்புற அமைச்சு அறிக்கை வெளியிட்டுள்ளது.
ரஷ்ய-உக்ரை ன் போரால் இந்த நிலைமை ஏற்பட்டுள்ளதாக சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.
அது 90 மில்லியன் கார்களிலிருந்து ஓராண்டு வெளியாகும் கரியமில வாயுவுக்குச் சமம் என்று அது குறிப்பிட்டது.
இராணுவ வாகனங்களில் பயன்படுத்தப்படும் பில்லியன் கணக்கான லிட்டர் எரிபொருள் கரிம வெளியேற்றத்துக்கான முக்கியக் காரணம் என்று சுற்றுப்புற நிபுணர்கள் குறிப்பிட்டனர்.
மில்லியன் ஹெக்டர் விவசாய நிலங்களும் காடுகளும் பற்றியெரிவது, போரின்போது நூற்றுக்கணக்கான எண்ணெய், எரிவாயு உள்கட்டமைப்புகள் வெடித்துச் சிதறுவது ஆகியவற்றாலும் கரியமில வாயு காற்றில் கலந்தது.
நூற்றுக்கணக்கான கிலோமீட்டர் தூரத்துக்கு அரண் அமைக்க இரும்பும் சிமெண்டும் பெரிய அளவில் பயன்படுத்தப்பட்டதையும் சுற்றுப்புற அமைச்சின் அறிக்கை குறிப்பிடுகிறது.
ரஷ்யாவால் கிட்டத்தட்ட 32 பில்லியன் டொலர் அளவில் பருவநிலைச் சேதம் ஏற்பட்டுள்ளது. ரஷ்யாவிடம் இழப்பீடு கோரும்போது இதையும் சேர்த்துக்கொள்ளப்போவதாக உக்ரைன் தெரிவித்துள்ளது.