வானில் நட்சத்திரங்கள் மறைந்துவிடும் அபாயம்!
நட்சத்திரங்களை இன்னும் 20 ஆண்டுகளில் காண முடியாமல் போகும் அபாயம் உள்ளதாக எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
வெளிச்சத்தினால் ஏற்படக்கூடிய தூய்மைக்கேடு அதற்கு காரணம் என குறிப்பிடப்படுகின்றது.
LED வகை விளக்குகளின் பயன்பாடு, சாலையில் அதிகமான விளக்குகள், விளம்பரங்கள், இரவில் ஒளியூட்டப்படும் விளையாட்டுத் தளங்கள் ஆகியவற்றால் அதிகமான நட்சத்திரங்களைப் பார்க்க முடிவதில்லை.
இரவு வானமும் சுற்றுச்சூழலில் ஓர் அங்கம் என்றும் அடுத்த தலைமுறையினரால் அதைக் காண முடியவில்லை என்றால் அது மிகப்பெரிய இழப்பு என்றும் விண்வெளி ஆய்வாளர் ஒருவர் கூறினார்.
வெளிச்சத்தினால் ஏற்படக்கூடிய தூய்மைக்கேட்டைக் குறைக்க நடவடிக்கைகள் எடுக்கப்படவேண்டும் என்று அவர் குறிப்பிட்டார்.
விளக்குகளின் வெளிச்சத்தைக் கட்டுப்படுத்துவதும் இரவு வானுக்கென ஓர் அமைச்சரை நியமிப்பதும் அதில் அடங்கும். ஆனால் மக்கள் இன்னமும் அதை ஒரு பெரிய பிரச்சினையாகக் கருதவில்லை என்று கூறப்படுகிறது.