தொப்பை 90 சென்றி மீற்றரை தாண்டினால் காத்திருக்கும் அபாயம்
![](https://iftamil.com/wp-content/uploads/2025/02/img-1704355501994_1a27957e-9210-4832-9c2b-8f0e0b3fef5f_1200x.jpg)
மதுப்பழக்கம் இருப்பவர்களுக்கு பெரும்பாலும் Alcoholic Fatty Liver நோய் வரும் என மருத்துவர் இளவரசி கூறுகிறார். ஆனால், தற்போதய காலகட்டத்தில் மதுப்பழக்கம் இல்லாதவர்களுக்கு Non Alcoholic Fatty Liver நோய் பரவி வருவதாக அவர் குறிப்பிட்டுள்ளார். இவர்களில் 100-ல் 5 பேருக்கு கல்லீரல் முற்றிலும் பாதிக்கப்பட வாய்ப்பு உள்ளது.
ஃப்ரக்டோஸ் எனப்படும் சர்க்கரையை கல்லீரலால் மட்டுமே ஜீரணிக்க முடியும். ஒரு கட்டத்தில் இதன் அளவு மீறும் போது கல்லீரலால் இதனை ஜீரணிக்க முடியாது. அந்தக் கட்டத்தில் கல்லீரலில் இருக்கும் செல்கள் அனைத்தும் வீங்கி விடும். இதனையும் மீறி தொடர்ந்து ஃப்ரக்டோஸ் எடுத்துக் கொண்டால் கல்லீரல் முழுவதுமாக பாதிக்கப்படும்.
ஆனால், முதல் நிலையில் இதன் அறிகுறிகள் தென்படாது. இறுதிகட்டத்தை எட்டும் போது தான் வயிறு வலி, வயிறு வீக்கம், இரத்த வாந்தி, மஞ்சள் காமாலை போன்றவை ஏற்படும். எனவே, மது அருந்துதல் மற்றும் ஃப்ரக்டோஸ் எனப்படும் சர்க்கரையை அதிகமாக எடுத்துக் கொள்வதால் இந்த பாதிப்பு ஏற்படும். அதிக இனிப்பு வகைகள், பதப்படுத்தப்பட்ட உணவுகள் போன்றவற்றை நிறைய எடுத்துக் கொண்டால் ஆபத்து ஏற்படும் சாத்தியக் கூறுகள் இருக்கிறது.
மேலும், பழங்களிலும் ஃப்ரக்டோஸ் இருப்பதால் அதனை ஜூஸ் எடுக்காமல் அப்படியே சாப்பிடலாம் என மருத்துவர் இளவரசி வலியுறுத்துகிறார். மாம்பழம், பலாப்பழம், வாழைப்பழங்களை அதிகமாக எடுத்துக் கொள்ளாமல், மற்ற பழங்களை சுமார் 150 கிராம் வரை சாப்பிடலாம்.
எனவே, சத்தான உணவுகளை சாப்பிட வேண்டும் என்றால் காய்கறிகளை அதிகமாக எடுத்துக் கொள்ளலாம் என மருத்துவர் இளவரசி வலியுறுத்துகிறார். மதுப்பழக்கம் கொண்டவர்கள், உடல் எடை அதிகமாக இருப்பவர்களுக்கு இந்த ஃபேட்டி லிவர் பிரச்சனை வரும் வாய்ப்பு அதிகம். பெண்களை பொறுத்தவரை அவர்களின் வயிற்றின் சுற்றளவு 80 செ.மீ-க்கு குறைவாக இருக்க வேண்டும்.
ஆண்களை பொறுத்தவரை இதன் அளவு 90 செ.மீ-க்கு குறைவாக இருக்க வேண்டும். அதன் அளவு அதிகமாக இருந்தால் அவர்களுக்கும் ஃபேட்டி லிவர் வரும் பாதிப்பு இருக்கிறது. இந்தப் பிரச்சனையை தவிர்க்க வேண்டுமானால் சர்க்கரையை குறைத்து, மது அருந்தாமல், சீரான உணவு பழக்கத்தை பின்பற்ற வேண்டும் என மருத்துவர் இளவரசி வலியுறுத்துகிறார்.