சிங்கப்பூரில் கடும் வெப்பத்தால் ஏற்பட்டுள்ள பாதிப்பு!
சிங்கப்பூரில் கடந்த சில நாட்களாக நிலவிய கடுமையான வெப்பம் காரணமாக அங்குள்ள பண்ணைகளில் உற்பத்தி 20 சதவீதம் குறைந்திருக்கிறது.
பருநிலை மாற்றத்தால் இங்கு மோசமான வானிலை தொடரும் என்பதால் அது சிங்கப்பூரின் உணவு விநியோகத்திலும் விலையிலும் தாக்கத்தை ஏற்படுத்தலாம் என்று நிபுணர்கள கூறுகின்றனர்.
சிங்கப்பூரின் சில பகுதிகளில் வெப்பம் இந்த மாதம் 37 பாகை செல்சியஸைத் தொட்டது. அதனால் ஆடுகள் பால் கொடுப்பது 15 சதவீதம் குறைந்தது. அதே வேளை குளிர்ந்த சூழலில் பராமரிக்கப்பட்ட ஆடுகளுக்குஊட்டச்சத்துகள் கலந்த தண்ணீர் கொடுக்கப்பட்டதால் கொஞ்சம் சமாளிக்க முடிந்ததாகப் பண்ணையாளர்கள் கூறினர்.
ஆனால் பண்ணையில் பொதுப் பயனீட்டுக் கட்டணம் சுமார் 600 வெள்ளி கூடியது. கோழிப் பண்ணையிலும் பாதிப்பு ஏற்பட்டுள்ளது. வழக்கமாக 4, 5 கிலோகிராம் எடை வரை வளரும் கோழிகள் மூன்றரைக் கிலோகிராமைத் தொடுவதற்கே சிரமப்பட்டதாகப் பண்ணையாளளதகள் கூறினர்.
2030ஆம் ஆண்டுக்குள் நாட்டுக்குத் தேவைப்படும் ஊட்டச்சத்து உணவில் 30 சதவீத உற்பத்தி செய்ய சிங்கப்பூர் இலக்குக் கொண்டுள்ளது.
கடுமையான வெப்பம் அதை எட்டுவதில் சுணக்கத்தை ஏற்படுத்தலாம் என்று நிபுணர்கள் கருதுகின்றனர்.