உக்ரைன் இராணுவத்தில் புதிதாக சேர்க்கப்பட்டவர்களால் ஏற்பட்டுள்ள நெருக்கடி
உக்ரைன் இராணுவத்தில் புதிதாக சேர்க்கப்பட்ட பெரும்பாலான படையினர் போருக்குச் செல்ல மறுத்துள்ளதாக தெரியவந்துள்ளது.
உக்ரேனிய இராணுவத்தின் கட்டளை அதிகாரிகளான 06 பேர் நடத்திய ஆய்வில், இந்த விடயம் தெரியவந்துள்ளது.
அதன்படி, பல உக்ரைன் வீரர்கள் ரஷ்ய ராணுவத்தால் கொல்லப்பட்டதும், எஞ்சியிருந்த பெரும்பாலான வீரர்கள் உக்ரைன் ராணுவத்தை விட்டு வெளியேறியதே இதற்குக் காரணம் என்கிறார்கள்.
ராணுவ பணியில் சேரும் புதிய உக்ரைன் வீரர்கள், ரஷ்யாவின் ராணுவ பலத்தை கண்டவுடன் மனம் தளர்ந்து பணியில் இருந்து வெளியேற முயல்வதாகவும், உக்ரைன் ராணுவம் கொடுக்கும் உத்தரவுகளை வீரர்கள் மதிக்கவில்லை என்றும் வெளிநாட்டு ஊடகங்களுக்கு தெரிவித்துள்ளனர்.
இந்த ஆண்டின் முதல் 4 மாதங்களில் மட்டும் உக்ரைன் ராணுவத்தில் இருந்து 19,000 பேர் வெளியேறியுள்ளதாக வெளிநாட்டு ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.