கொழும்பில் மாணவர்கள் முன்னெடுக்கவுள்ள போராட்டத்திற்கு நீதிமன்றம் விதித்த உத்தரவு!
பல்கலைக்கழகங்களுக்கு இடையிலான மாணவர் பேரவையினால் கொழும்பில் இன்று (10.08) ஏற்பாடு செய்யப்பட்டிருந்த ஆர்ப்பாட்டம் தொடர்பில் நீதிமன்ற உத்தரவு பிறப்பித்துள்ளது.
இதன்படி, கோட்டை ஜனாதிபதி செயலகம், ஜனாதிபதி மாளிகை, பிரதமர் அலுவலகம், கலுமுவதொர பிட்டிய உள்ளிட்ட பல இடங்களுக்குள் போராட்டக்காரர்கள் பிரவேசிக்க தடை விதித்து கோட்டை நீதவான் திலின கமகே உத்தரவு பிறப்பித்துள்ளார்.
எவ்வாறாயினும் அமைதியான முறையில் போராட்டங்களை முன்னெடுக்க முடியும் என தெரிவித்த நீதவான் நீதிமன்ற உத்தரவை போராட்டக்காரர்களிடம் கையளிக்குமாறு கோட்டை பொலிஸாருக்கு உத்தரவிட்டுள்ளார்.
பல்கலைக்கழகங்களுக்கு இடையிலான மாணவர் பேரவையின் அழைப்பாளர் மதுஷான் சந்திரஜித் உள்ளிட்ட 10 பேருக்கு எதிராக இந்த உத்தரவு பிறப்பிக்கப்பட்டதுடன் நீதிமன்ற உத்தரவை மீறும் போராட்டக்காரர்களை கைது செய்து நீதிமன்றில் முற்படுத்துமாறும் உத்தரவு பிறப்பித்துள்ளார்.