இலங்கையில் முக்கிய அரசியல் தலைவர்களுக்கு எதிராக நீதிமன்றம் பிறப்பித்துள்ள உத்தரவு!
 
																																		இலங்கையில் நெருக்கடி நிலையை ஏற்படுத்தியதன் ஊடாக முன்னாள் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ, முன்னாள் நிதியமைச்சர்களான மஹிந்த ராஜபக்ஷ மற்றும் பசில் ராஜபக்ஷ உள்ளிட்டோர் அடிப்படை உரிமைகளை மீறியுள்ளதாக உயர்நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது.
அத்துடன், நாட்டில் ஏற்பட்டுள்ள பொருளாதார நெருக்கடிக்கு அவர்கள் பொறுப்புக்கூற வேண்டும் எனவும் தீர்ப்பளிக்கப்பட்டுள்ளது.
தற்போது நாட்டில் ஏற்பட்டுள்ள நெருக்கடிக்கு பொறுப்புக்கூற வேண்டியவர்கள் தொடர்பில் விசாரணை மேற்கொள்ளப்பட வேண்டுமென இரண்டு அடிப்படை உரிமை மனுக்கள் தாக்கல் செய்யப்பட்டிருந்தன.
இந்த மனுக்களை விசாரித்த, ஐவரடங்கிய உயர்நீதிமன்ற நீதியரசர்கள் குழாமின், பெரும்பான்மையான நீதியரசர்களின் தீர்மானத்துக்கமைய இந்த தீர்ப்பு வழங்கப்பட்டுள்ளது.
(Visited 11 times, 1 visits today)
                                     
        



 
                         
                            
