வட அமெரிக்கா

ரஷ்யாவுடன் ரகசிய ராணுவ கூட்டணி வைத்துள்ள நாடு; கண்டனம் தெரிவித்துள்ள அமெரிக்கா

ரஷ்யா மற்றும் ஈரான் நாடுகள் வெளி உலகிற்கு தெரியாத வகையில், ரகசியமான முறையில் ராணுவ கூட்டணி வைத்து செயல்படுவதாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது.

அமெரிக்காவின் வெள்ளை மாளிகையை சேர்ந்த, தேசிய பாதுகாப்பு அமைச்சகத்தின் செய்தி தொடர்பாளர் ஜான் கிர்பி, ரஷ்யா மற்றும் ஈரானின் ரகசிய ராணுவ செயல்பாடுகளை பற்றி கூறியுள்ளார்.இரு நாடுகளும், ஆயுத பரிமாற்றங்கள் மற்றும் ராணுவ துறை சார்ந்த தொழில் நுட்ப தகவல்களை பரிமாறி கொள்வதாக அவர் குற்றம் சாட்டியுள்ளார்.மேலும் இதன் மூலம் ரஷ்யா உக்ரைன் மக்களை கொன்று குவிப்பதற்கும், ஈரானின் எதிரிகளை அழித்தொழிப்பதற்கும் இரு நாடுகள் திட்டமிட்டிருப்பதாக அவர் கூறியுள்ளார்.

அமெரிக்கா தொடர்ந்து ரஷ்யா மற்றும் ஈரான் இடையே நடக்கும் ராணுவ செயல்பாடுகளை கண்காணித்து வருகிறது. ஈரான் ஏற்கனவே ரஷ்யாவிற்கு ஆயுதங்கள் மற்றும் பீரங்கிகளை வழங்கியது, இதனை தொடர்ந்து தற்போது ட்ரோன்களை வழங்கி உள்ளது’ வெள்ளை மாளிகை செய்தி தொடர்பாளர் ஜான் கிர்பி தெரிவித்துள்ளார்.மேலும் இதுவரை ஈரான் ரஷ்யாவிற்கு 400க்கும் மேற்பட்ட ஆளில்லா விமானங்களை வழங்கியுள்ளது. இந்த UAVகளை ரஷ்யாவிற்கு வழங்குவதன் மூலம், ஈரான் உக்ரைனில் ரஷ்யாவின் நடத்தி வரும் ஆக்கிரமிப்பு போரை நேரடியாக செயல்படுத்தி வருகிறது.

ஜான் கிர்பி

இரு நாடுகளுக்கு இடையேயான இந்த உறவு, மத்திய கிழக்கில் உள்ள பிராந்தியத்திற்கும், சர்வதேச நாடுகளுக்கும் தீங்கு விளைவிக்கும் என அமெரிக்கா எச்சரித்துள்ளது.ரஷ்யாவும் ஈரானும் ஐநா பாதுகாப்பு கவுன்சில் அனுமதியின்றி ஈரானிலிருந்து ரஷ்யாவிற்கு ட்ரோன்களை மாற்றுவதில் பங்கேற்பதன் மூலம், ஐநா பாதுகாப்பு கவுன்சில் தீர்மானத்தின் கீழ் தங்கள் கடமைகளை தொடர்ந்து மீறுவதாக அமெரிக்கா எச்சரித்துள்ளது.

(Visited 9 times, 1 visits today)

Mithu

About Author

You may also like

செய்தி வட அமெரிக்கா

கனடாவில் வீட்டில் இரகசிய ஆயுத உற்பத்திச்சாலை!

கனடாவில் ஆயுத உற்பத்தியில் ஈடுபட்ட நபர் ஒருவரை பொலிஸார் கைது செய்துள்ளனர். நோவா ஸ்கோட்டியாவின் மீகர்ஸ் கிரான்ட் என்னும் பகுதியின் வீடொன்றில் இந்த இரகசிய ஆயுத உற்பத்திச்சாலை
செய்தி வட அமெரிக்கா

அறுவைசிகிச்சை முடித்த பின் தெரிய வந்த உண்மை… கதறி அழுத தந்தை!

அமெரிக்காவைச் சேர்ந்த இளம்பெண் தன் தந்தைக்கே தெரியாமல், ரகசியமாக அவருக்குச் சிறுநீரக தானம் செய்துள்ள சம்பவத்தால், நெகிழ்ந்து போன தந்தையின் வீடியோ இணையத்தில் வைரல் ஆகியுள்ளது. அமெரிக்காவின்