யாழில் வெட்டுக்காயங்களுடன் இனங்காணப்பட்ட ஐவரின் சடலங்கள்!

யாழ்ப்பாணம் நெடுந்தீவில் வெட்டுக் காயங்களுடன் ஐவரின் சடலங்கள் மீட்கப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
மற்றொருவர் படுகாயங்களுடன் ஆபத்தான நிலையில் யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
நெடுந்தீவு மாவளி இறங்குதுறையை அண்டிய 12ஆம் வட்டாரத்தில் உள்ள வீடொன்றில் குறித்த சடலங்கள் இன்று இனங்காணப்பட்டுள்ளன.
வெளிநாட்டிலிருந்து வருகை தந்தவர்கள் மற்றும் யாழ்ப்பாணத்தில் வசிப்பவர்களுமே இவ்வாறு கொலை செய்யப்பட்டுள்ளதாக பொலிஸார் கூறியுள்ளனர்.
விசாரணைகளின் பின்னரே சம்பவம் தொடர்பான மேலதிக தகவல்களை வழங்க முடியும் என பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
(Visited 12 times, 1 visits today)