தென் கொரிய ஜனாதிபதி யுன் சுக்-யியோலுக்கு எதிராக ஒரு மனதாக வாக்களித்த அரசியலமைப்பு நீதிமன்றம்!

தென் கொரிய ஜனாதிபதி யுன் சுக்-யியோலுக்கு எதிரான பதவி நீக்க தீர்மானத்தை உறுதி செய்வதற்கு அந்நாட்டு அரசியலமைப்பு நீதிமன்றம் ஒருமனதாக வாக்களித்துள்ளது என வெளிநாட்டு ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.
அதன்படி, தென் கொரிய அதிபர் யுன் சுக்-யியோல் பதவி விலக வேண்டும், மேலும் 60 நாட்களுக்குள் புதிய அதிபர் தேர்தல் நடத்தப்பட வேண்டும்.
அதுவரை, நாட்டின் பிரதமர் தற்காலிக ஜனாதிபதியாகப் பணியாற்றுவார் எனவும் அறிவிக்கப்பட்டுள்ளது.
2017 ஆம் ஆண்டு தென் கொரியாவில் இதேபோன்ற முறையில் ஒரு ஜனாதிபதி நீக்கப்பட்டதாக வெளிநாட்டு ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.
(Visited 1 times, 1 visits today)