குளிர் பருவம் ஆரம்பம் – அமெரிக்கர்களுக்கு எச்சரிக்கை!
அமெரிக்காவின் சில பகுதிகளில், குறிப்பாக வடகிழக்கு மற்றும் மேற்குப் பகுதிகளில், டிசம்பர் முழுவதும் “அதிக” குளிரான வானிலை நிலவும் என எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
இம்மாதத்தின் (டிசம்பர்) மூன்றாவது வாரத்தில் கனேடிய சமவெளிகளிலிருந்து அமெரிக்க கிழக்கு கடற்கரை வரை அதிக குளிர் நிறைந்த வானிலையை மக்கள் உணர்வார்கள் என காலநிலை ஆய்வாளர் ஜூடா கோஹன் (Judah Cohen) கணித்துள்ளார்.
அதேபோல் இந்த வாரத்தில் வியாழன் மற்றும் வெள்ளிக்கிழமைகளில் மத்திய மற்றும் அட்லாண்டிக் பகுதிகளில் பூஜ்ஜியத்திற்கு கீழான வெப்பநிலையே பதிவாகும் எனவும் அவர் தெரிவித்துள்ளார்.





