பிரபல நடிகைக்கு சிறை தண்டனை விதித்த சென்னை நீதிமன்றம்

பிரபல நடிகையும், முன்னாள் எம்.பியுமான ஜெயப்பிரதாவுக்கு எழும்பூர் நீதிமன்றம் 6 மாத காலம் சிறை தண்டனை விதித்துள்ளது.
தமிழில் மன்மத லீலை, நினைத்தாலே இனிக்கும், ஏழை ஜாதி உள்ளிட்ட படங்களில் நடித்தவர் ஜெயப்பிரதா. தெலுங்கு நடிகையான இவர் இந்தி, மராத்தி, பெங்காலி மொழிப்படங்களிலும் நடித்து பிரபலமானவர்.
முன்னாள் எம்.பியான இவர் நடத்தி வந்த திரையரங்கில் பணிபுரிந்த தொழிலாளர்களுக்கான ESI பணத்தை, அரசு தொழிலாளர் காப்பீட்டு நிறுவனத்திற்கு செலுத்தவில்லை என்று வழக்கு தொடரப்பட்டது.
இந்த வழக்கு மீதான விசாரணை முடிவுக்கு வந்ததைத் தொடர்ந்து, இன்று சென்னை எழும்பூர் நீதிமன்றம் தீர்ப்பளித்தது. அதன்படி நடிகை ஜெயப்பிரதாவுக்கு 6 மாதம் சிறை தண்டனை விதிக்கப்பட்டுள்ளது.
(Visited 12 times, 1 visits today)