ஜெர்மனியில் வீடுகளின் விலையில் ஏற்பட்டுள்ள மாற்றம்!
உலகப் பொéருளாதாரத்திற்கான அமைப்பின் புள்ளிவிவரங்களுக்கமைய ஜெர்மனி வீட்டுச் சந்தையில் சொத்து விலை 60 ஆண்டுகளில் இல்லாத கடுமையான வீழ்ச்சியைக் கண்டது.
2023 ஆம் ஆண்டில், ஒரு அடுக்குமாடி குடியிருப்பு ஒன்று வாங்குவதற்கான செலவு 8.9 சதவீதம் குறைந்துள்ளது. ஒரு தனி வீட்டிற்கு, செலவுகள் 11.3 சதவீதமும், அரை பிரிக்கப்பட்ட வீடுகளுக்கு, 20.1 சதவீதமும் குறைந்துள்ளது.
ஜெர்மனியில் ரியல் எஸ்டேட் விலைகளில் தற்போதைய வீழ்ச்சியின் வேகம் மற்றும் அளவு வரலாற்று ரீதியாக முன்னோடியில்லாதது.
1960 ஆம் ஆண்டுகளில் நிபுணர் குழுக்கள் விலைகளை பதிவு செய்யத் தொடங்கியதிலிருந்து, ரியல் எஸ்டேட் விலைகள் இவ்வளவு விரைவாகவும் கடுமையாகவும் வீழ்ச்சியடைந்ததில்லை, என்று அறிக்கை கூறுகிறது.
1960 ஆம் ஆண்டுகளின் நடுப்பகுதியில் இது போன்ற குறிப்பிடத்தக்க வீழ்ச்சி கடைசியாக காணப்பட்டது என்று தெரியவந்துள்ளது.