இலங்கையில் மின் கட்டணத்தில் ஏற்படவுள்ள மாற்றம்!

இலங்கையில் அடுத்த மாதம் முதலாம் திகதி முதல் மேற்கொள்ளப்படும் மின் கட்டணத் திருத்தம் தொடர்பில் மின்சார சபை தயாரித்துள்ள மின் கட்டண யோசனைத் திட்டம் பொதுப் பயன்பாட்டு ஆணைக்குழுவிடம் கையளிக்கப்பட்டுள்ளது.
அரசாங்கத்தின் கொள்கைத் தீர்மானங்களையும் மின் கட்டணத் திருத்த யோசனைகளை முன்வைக்க வேண்டிய வழிமுறைகளையும் கருத்திற் கொண்டு வருடாந்தம் இரண்டு தடவைகள் மின் கட்டணத் திருத்தம் மேற்கொள்ளப்படுகிறது.
இதன்படி ஒவ்வொரு வருடமும் ஜனவரி முதலாம் திகதியும் ஜூன் மாதம் முதலாம் திகதியும் இந்த மின் கட்டணத் திருத்தம் மேற்கொள்ளப்படுகிறது.
உண்மையான மின் உற்பத்தித் தரவுகளையும், விற்பனை சார் தரவுகளையும், எரிபொருள், நிலக்கரி மற்றும் ஏனைய மூலப் பொருட்களின் விலைகளையும்,
இந்த வருட மின் உற்பத்தித் திட்டங்களையும், மின்சாரத் தேவையையும் கருத்திற் கொண்டு மின்சார சபை இந்த யோசனைத் திட்டத்தை தயாரித்துள்ளது.
மின்சாரத்தைக் குறைவாகப் பயன்படுத்தும் நுகர்வோருக்கு உயர்ந்தபட்சப் பயனைப் பெற்றுக் கொடுக்கும் வகையில் இந்த யோசனைத் தயாரிக்கப்பட்டுள்ளது.